குஜராத் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து! 5 பேர் பலி!
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கொரோனா மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில், நேற்று இரவு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில், கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இந்த தீ விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, முதல்வர் விஜய் ரூபானி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.