இம்ம்…ஆடைகளை கழட்டுங்கள் 68 பேரும்.. மாணவிகளிடம் அத்துமீறிய கல்லூரி நிர்வாகம்-வழுக்கும் கண்டனங்கள்
68 மாணவிகளின் ஆடைகளை களைந்து கல்லூரி நிர்வாகமொன்று நடத்திய அநாகரீகச் செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சஜ்ஹானந்த் மகளிர் கல்லூரி இங்கு படிக்கும் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் விடுதி சமையலறை மற்றும் கோயிலுக்குள் நுழைய,மற்ற மாணவிகளுடன் பழகவும் தடை விதித்துள்ளது கல்லூரி நிர்வாகம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கல்லூரி விடுதி காப்பாளர் ஒரு புகாரை கல்லூரி முதல்வர்க்கு அனுப்பி உள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் அக்கல்லூரி முதல்வர் தலைமையில்,புகாரில் இடம் பெற்ற 68 மாணவிகளும் கழிவறைக்கு வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,அங்கு அவர்களின் உள்ளாடைகளை களையச் சொல்லி சோதனை நடத்தியாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளச்சலுக்கு ஆளான அம்மாணவிகள் போலீசில் அளித்தனர்.இந்த புகாரை அடுத்து அக்கல்லூரியின் முதல்வர், விடுதி வார்டன் உட்ப்ட 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர்.இந்த நிகழ்வானது அம்மாநிலத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தோடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்புகளும் தங்கது கண்டங்கள் அக்கல்லூரிக்கு தெரிவித்து வருகின்றனர்.