கனமழை எதிரொலி ;சாலைகளை சீரமைக்க ரூ .74.70 கோடி ஒதுக்கீடு – குஜராத் முதல்வர் அலுவலகம் அறிவிப்பு..!
குஜராத் மாநிலத்தில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அம்மாநில முதல்வர் ரூ.74.70 கோடி ஒதுக்கியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன.இந்நிலையில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கு முகமந்திரி ஷஹேரி சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.74.70 கோடியை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஒதுக்கியுள்ளதாக முதல்வர் அலுவலகம் (சிஎம்ஓ) தெரிவித்துள்ளது.
மேலும்,சிம்ஓ தகவலின்படி,இந்த தொகையை தெர்மோபிளாஸ்டிக் சாலை பெயிண்ட், கர்ப்ஸ் பெயிண்ட், தெரு விளக்கு பலகை மற்றும் சாலை பாதுகாப்பு பணிகளுக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
CM Bhupendra Patel has sanctioned Rs 74.70 crores under Mukhyamantri Shaheri Sadak Yojana for repairing roads and road resurfacing works following heavy rains in the state: Gujarat Chief Minister’s Office
(file photo) pic.twitter.com/IOiXYMB72L
— ANI (@ANI) October 5, 2021
மேலும்,இது குறித்து முதல்வர் அலுவலகம் கூறியதாவது:
“நடப்பு ஆண்டு கனமழை காரணமாக மாநிலத்தின் நகரங்களில் சாலை சேதம் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை சரிசெய்ய முதல்வர் பூபேந்திர படேல் முகமந்திரி ஷஹேரி சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ .74.70 கோடியை உடனடியாக ஒதுக்கியுள்ளார்.
இந்த பருவமழையின் காரணமாக பெய்து வரும் கனமழை மற்றும் இன்னும் மழை பெய்யும் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புறங்களில் சேதமடைந்த சாலைகளை சரிசெய்தல், மறுசீரமைப்பு மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன “,என்று தெரிவித்துள்ளது.