குடியரசு தலைவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சந்திப்பு…!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார். குஜராத் முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக இன்று பூபேந்திர படேல் டெல்லி டென்றுள்ளார்.
அங்கு, அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மேலும் இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் குஜராத் முதல்வர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.