குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு தொழிலதிபர் லடாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சீன காருக்கான ஆர்டரை ரத்து செய்துள்ளார் .
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் மயூர்த்வாஜ்சிங் ஜலா எம்.ஜி.ஜெய் கணேஷ் ஆட்டோகார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .51,000 செலுத்தி 2019 ஜூலையில் எம்.ஜி. ஹெக்டர் காரை முன்பதிவு செய்திருந்தார். இந்த காரானது சீன ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷனின் (எஸ்.ஏ.ஐ.சி) துணை நிறுவனமான எம்.ஜி. ஹெக்டர் இந்தியாவின் தயாரிப்பாகும்.
இந்நிலையில் லடாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காருக்கான ஆர்டரை ரத்து செய்துள்ளார் .
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் எம்.ஜி. ஹெக்டர் “சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன்” தொடர்பு கொண்ட ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார் என்பதால் நான்அதை வாங்க விரும்பவில்லை.எஸ்.ஐ.ஐ.சி ஒரு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம், எனவே நான் எந்த வியாபாரத்தையும் செய்ய விரும்பவில்லை அல்லது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு பொருளையும் பயன்படுத்த விரும்பவில்லை என்று அந்த கார் விற்பனையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் .
இது குறித்து விளக்கமளித்துள்ள அந்நிறுவனம் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாகவும், பணம் திருப்பித் தரப்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…