நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்கள் 2024 நாடாளுமனன்றே தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது.- குஜராத் நிதி அமைச்சர் கனு தேசாய் கருத்து.
குஜராத்தில் இன்று 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது . வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர். 27 வருடமாக ஆட்சி செய்யும் பாஜக இந்த முறையும் வெற்றி பெறுமா.?அல்லது காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா.? அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என இந்திய நாடே இந்த தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
ஏனென்றால் இந்த தேர்தல் உண்மையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓர் ஒத்திகை போல அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது . அதனை உறுதிப்படுத்தும் விதமாக, குஜராத் மாநில நிதி அமைச்சர் கனு தேசாய் கருத்து தெரிவித்துள்ளார் .
அவர் இந்த குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து கூறுகையில் , ‘
நடந்து வரும் இந்த சட்டமன்றத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஓர் அரை இறுதி போட்டி போன்றது என்றும், குஜராத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பாஜகவுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசுகையில் , ‘ பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது மக்கள் கையில் இருக்கிறது. ஆனால், மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று 100% என்னால் சொல்ல முடியும்’ என நம்பிக்கையுடன் மாநில நிதி அமைச்சர் தேசாய் கூறினார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…