குஜராத்தில் உள்ள மோர்பியில் கார் ஒன்று லாரியில் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோர்பி-மாலியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்ப்டி கிராமத்தின் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதாகவும் கார் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராதிகா பாரி கூறியுள்ளார்.
மாலியாவிலிருந்து மோர்பி நகரை நோக்கி ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து மோர்பி தாலுகாவில் உள்ள காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் ஆனந்த் ஷெகாவத், தாரசந்த் பராலா, அசோக் பிலெடா, விஜேந்திர சிங் மற்றும் பவன் மிஸ்திரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காரை ஓட்டியவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…