கின்னஸ் சாதனை படைத்த 12,638 வைரம் கொண்ட 25 வயது இந்திய வைர விற்பனையாளரின் மோதிரம்!

Default Image

கின்னஸ் சாதனை படைத்த 12,638 வைரம் கொண்ட 25 வயது இந்திய வைர விற்பனையாளரின் மோதிரம், ஆனால் ஏலத்தில் விற்பதாக முடிவு இல்லை என தெரிவித்துள்ளார்.

தே மேரி கோல்ட் – வைரங்கள் செழிப்பு என்று அழைக்கப்படக்கூடிய சங்கீத இசை  வடிவமுடைய 175 கிராமுக்கும் அதிகமாக மற்றும் 12,638 சிறிய வைரங்களை கொண்ட ஒரு விரிவான மலர் வடிவ மோதிரம் கின்னஸ் சாதனை பெற்றுள்ளது. இந்த மோதிரத்தை வடிவமைத்தது இந்தியாவின் 25 வயதுடைய வைர விற்பனையாளர் ஹர்ஷித் பன்சால். இதுகுறித்து அவர் கூறுகையில், இது அணிய வசதியாக இருப்பதுடன் அழகாகவும் இருக்குமாம். மேலும் இதை உருவாக்குவது தனது கனவு எனவும் அவர் கூறியுள்ளார். தான் 2 வருடங்களுக்கு முன்பு சூரத்தில் நகை வடிவமைப்பு படிக்கும் பொழுது இந்த யோசனை தனக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வைரங்களை வைத்து ஒரு மோதிரத்தை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் தற்போது தனது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் சாதனை பெற்றுள்ள இந்த மோதிரம் 8 அடுக்கு கொண்ட மலர் வடிவமைப்பில் ஒவ்வொரு சிறிய இதழையும் தனித்துவமாக உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மோதிரத்தின் வடிவமைப்பாளர் ஹர்ஷித் அவர்கள் கூறுகையில், இது அழகாக இருந்தாலும் பலர் இதனை ஏலத்திற்கு கேட்டாலும் தற்பொழுது இதை விற்பது குறித்த திட்டம் தனக்கு இல்லை என அவர் கூறியுள்ளார். மேலும் இது தனக்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம் என்பதை விட இது விலை மதிப்பற்ற ஒன்றாகவும் தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பதாக கின்னஸ் சாதனையில் 7,801 வைரம் கொண்ட மோதிரம் இடம் பெற்று இருந்தது. அந்த சாதனையை முறியடித்து தற்பொழுது 12,638 சிறிய வைரங்களை கொண்ட மலர் வடிவிலான மோதிரம் இடம்பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்