கின்னஸ் சாதனை : உலகின் மிகவும் குள்ளமான மனிதர் இவர் தான்…!
நேபாளத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் டோர் பகதூர் கபாங்கி உலகின் மிக உயரம் குறைவான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமானவர்கள், உயரமானவர்கள், மெலிதானவர்கள், குண்டானவர்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தில் காணப்படுவதுண்டு. ஆனால் சில குறைகளோடு காணப்படுபவர்களை பிறர் கேலி செய்தாலும், சிலரை இந்த குறைதான் பல சாதனைகளை படைப்பதற்கும் வழிவகுக்கிறது.
அந்த வகையில் நேபாளத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் டோர் பகதூர் கபாங்கி உலகின் மிக உயரம் குறைவான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவரது உயரம் வெறும் 72 சென்டிமீட்டர்தான் உள்ளது.