பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது கருப்பையில் இருந்து 236 நார்த்திசுக்கட்டிகளை அகற்றியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது வாழ்க்கையில், அதிர்ச்சிகரமான மற்றும் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை மூலம் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரித்திகா சர்மா. இவருக்கு வயது 34. இவர் பெங்களூரில் உள்ள சக்ரா வேர்ல்டு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். இவருக்கு மருத்துவர் சாந்தலா துப்பண்ணா மற்றும் அவரது குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சையின் போது அவரது கருப்பையிலிருந்து 236 நார்த்திசுக்கட்டிகள் அகற்றப்பட்டுள்ளது.
இந்த கட்டிகள் ஒரு காலிபிளவரை போல பெரியதாகவும் இரண்டரை கிலோ எடையுடன் இருந்துள்ளது. கட்டிகள் மென்மையான தசை செல்கள் மற்றும் நார்ச்சத்து இணைப்பு திசுக்களால் ஆன புற்றுநோய் இல்லாத கட்டிகள். இது கருப்பையில் உருவாகின்றன. இந்த கட்டிகள் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு, முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நான்கரை மணி நேரம் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் குழாய் கீழே உள்ள நார்த்திசுக் கட்டிகள் கருப்பை இடதுபுறம் பரவியதால் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையின்போது 236 கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து பத்திரிகையாளர் ரித்திகா கூறுகையில் இது எதிர்பாராத நிகழ்வு. கின்னஸ் சாதனை மறக்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் இந்த சூழ்நிலையை நாங்கள் எவ்வாறு வெற்றிகரமாக சந்தித்தோம் என்பதை எனக்கு தொடர்ந்து நினைவூட்டுகிறது மற்றும் எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…