கின்னஸ் சாதனை : பெண் பத்திரிகையாளரின் கருப்பையில் இருந்து அகற்றப்பட்ட 236 நார்த்திசுக்கட்டிகள்…!

Default Image

பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது கருப்பையில் இருந்து 236 நார்த்திசுக்கட்டிகளை அகற்றியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

பெங்களூரை சேர்ந்த 34 வயதான பத்திரிக்கையாளர் ரித்திகா தனது வாழ்க்கையில், அதிர்ச்சிகரமான மற்றும் தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை மூலம் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரித்திகா சர்மா. இவருக்கு வயது 34. இவர் பெங்களூரில் உள்ள சக்ரா வேர்ல்டு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். இவருக்கு மருத்துவர் சாந்தலா துப்பண்ணா மற்றும் அவரது குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சையின் போது அவரது கருப்பையிலிருந்து 236 நார்த்திசுக்கட்டிகள் அகற்றப்பட்டுள்ளது.

இந்த கட்டிகள் ஒரு காலிபிளவரை போல பெரியதாகவும் இரண்டரை கிலோ எடையுடன் இருந்துள்ளது.  கட்டிகள் மென்மையான தசை செல்கள் மற்றும் நார்ச்சத்து இணைப்பு திசுக்களால் ஆன புற்றுநோய் இல்லாத கட்டிகள். இது  கருப்பையில் உருவாகின்றன. இந்த கட்டிகள் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு, முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.  நான்கரை மணி நேரம்  அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறுகையில், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் குழாய் கீழே உள்ள நார்த்திசுக் கட்டிகள் கருப்பை இடதுபுறம் பரவியதால் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையின்போது 236 கட்டிகளை  வெற்றிகரமாக அகற்றியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து பத்திரிகையாளர் ரித்திகா கூறுகையில் இது எதிர்பாராத நிகழ்வு. கின்னஸ் சாதனை மறக்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் இந்த சூழ்நிலையை நாங்கள் எவ்வாறு வெற்றிகரமாக சந்தித்தோம் என்பதை எனக்கு தொடர்ந்து நினைவூட்டுகிறது மற்றும் எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்