தண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்த இளைஞர்
மும்பையைச் சேர்ந்த சின்மய் பிரபு என்ற இளைஞர் ஒருவர் தண்ணீருக்குள் ரூபிக் க்யூப்பை சரியாக இணைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி நீச்சல் குளம் ஒன்றில் தண்ணீரில் முழ்கிய முக்கோண வடிவ ரூபிக் க்யூப்பை சரியாக இணைத்து சாதனை படைத்தது உள்ளார்.
இதனால் சின்மய் பிரபுவிற்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 1. 48 வினாடிகளில் இந்த சாதனையை செய்து உள்ளார் . கடந்த 2017-ம் ஆண்டு தனது கால்களை பயன்படுத்தி ரூபிக் க்யூப்பை இணைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.