கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை…!

Default Image
  • கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் முதல் அலையில், முதியவர்களை தான் அதிகமாக பாதித்தது. பின் இரண்டாவது அலையில் நடுத்தர வயதினரே பெரிதும் பாதித்தது. தற்போது மூன்றாவது அலையில் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், ஆயுஷ் அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று குழந்தைகளை கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொற்று நோய் பொதுவாக பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு லேசான பாதிப்பை தான் ஏற்படுத்து. பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சையும் தேவையில்லை. இந்த கொடிய வைரஸில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறை தற்காப்பு நடவடிக்கைகள் தான் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 58 பக்க ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிதல், யோகா பயிற்சி, ஆயுர்வேத மருந்துகள் ஊட்டச்சத்து மருந்து மூலம் கொரோனாவில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம். பெற்றோர் தடுப்பூசி போடுவது ஆகியவை அந்த அறிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் வலுவானது. ஆனால் கொரோனா வைரஸ் பல பிரிவுகளாக உருவாகி வருவதால், அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க தொடர்பான அனைத்து நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை இதோ,

ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணம் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்