நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு..!
ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகுதான் பொறியாளர் அல்லது மருத்துவராக ஆவதற்கு நடத்தப்படும் JEE மற்றும் NEET தேர்வில் கலந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், எதிர்காலத்தில் டாக்டராகவோ, இன்ஜினியராகவோ ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்குகிறார்கள்.
இதன் காரணமாக பெற்றோர்கள் பெரிய நகரங்களில் இயங்கி வரும் JEE மற்றும் NEET பயிற்சி மையங்களில் சிறு வயதிலிருந்தே மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில், நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்தும், பட்டப்படிப்பைக் காட்டிலும் குறைவான தகுதியைக் கொண்ட ஆசிரியர்களை கோச்சிங் சென்டரில் ஈடுபடுத்தக் கூடாது.
அரசு பங்களாவை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா!
மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்த பின்னரே 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது. குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்ய கூடாது. விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் விதிமீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.