கடந்த வாரம் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு நபர் ஜிந்த் மாவட்டத்தில் போலீசாரால் கொல்லப்பட்டார் என்று ஹரியானா போலீசார் திங்களன்று தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட காவலர்களில் ஒருவரான கான்ஸ்டபிள் ரவீந்தர் சிங் இவருக்கு வயது 23. இவர் இறப்பதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாகனத்தின் எண்ணை தனது கையில் எழுதியுள்ளார் என்று ஹரியானா காவல்துறைத் மனோஜ் யாதவா இறந்த போன போலீசாரை பாராட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், எங்கள் துணிச்சலான கான்ஸ்டபிள் ரவீந்தர் சிங் தனது உயிரை இழப்பதற்கு முன் காட்டிய செயல் போலிஸ் திறன் ஆகும். பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்ட வாகன எண்ணை அவர் கையில் எழுதியுள்ளார் என்று யாதவா கூறினார். டாக்டர் ஹனிஃப் குரேஷியும் கான்ஸ்டபிளை ஒரு ‘துணிச்சலானவர்’ என்று புகழ்ந்துள்ளார்.
இறந்து போன ரவீந்தர் சிங் மற்றும் சிறப்பு காவல்துறை அதிகாரி கப்டன் சிங் ஆகியோரின் கொலை வழக்கைத் முடிப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவரின் பதிவு எண் ஒரு முக்கியமான ஆதாரம் என காவல்துறைத் தரிவித்தது.
இந்த சம்பவத்தின் விசாரணையில் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் புட்டானா காவல் நிலையம் அருகே சோனிபட்-ஜிந்த் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குற்றவாளிகள் இருந்ததாகவும் காவலர்கள் அவர்களை எச்சரித்த போது அது வாக்குவாதத்திற்கு வழிவகுத்து பின் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி போலீசாரிடம் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…