தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட தாடி வைத்து அந்த தாடி உடனே வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் இவரை திடீரென சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட காவலர் விதிமுறைகளை மீறி உரிய அனுமதியின்றி தாடி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாடி வளர்க்க கூடாது என்பது விதி முறை. பல முறை அறிவித்தும் இவர் தாடியை எடுக்காததால், இந்தசர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக அபிஷேக் சிங் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து இந்தசர் அலி கூறுகையில், ‘1994 ஆம் ஆண்டு கான்ஸ்டபிளாக வேலை பார்த்தேன். அப்போது லேசான தாடி இருந்தது. அதற்கு பிறகும் தாடி வைத்து வருகிறேன். நான் எத்தனையோ இடத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தது இல்லை. இந்த தாடி சம்பந்தமாக நான் பலமுறை அனுமதி கேட்டு. கடிதம் அனுப்பி இருந்தேன் ஆனாலும் அதில் ஒன்றுக்கும் இதுவரை பதில் வரவில்லை.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…