ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது – ப.சிதம்பரம்
ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் இது குறித்து முன்னால் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,பிரதமரும் அமைச்சர்களும், குறைந்தபட்ச ஆதார விலை உறுதியாக வழங்கப்படும் என்று கூறிவருகின்றனர்.இதனை எப்படி என்று இந்திய மக்களுக்கு விளக்க வேண்டும்.குறிப்பாக ஒரு விவசாயி என்ன விவசாயம் செய்துள்ளார் , அதனை யாருக்கு விற்றுள்ளார் என அரசுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியா முழுவதும் உள்ள இருக்கின்ற கிராமங்களில் தினத்தோறும், மில்லயன் கணக்கான விவசாய பொருட்கள் விற்பனை தொடர்பாக பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்த பரிமாற்றங்களுக்கு எப்படி மத்திய, மாநில அரசுகள் குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்யும்.மோடி அரசு விவசாயிகளிடம் பொய் சொல்வதையும், தவறான வாக்குறுதிகளை வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.
தனிநபர் விளைபொருள் பரிமாற்றத்துக்கும், குறைந்த பட்ச ஆதார விலை அளிக்கப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதி, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது என்று தெரிவித்துள்ளார்.
There will be millions of private transactions every day in thousands of villages all over India. How will the government guarantee MSP is paid in these transactions?
Under which law is a private purchaser obliged to pay MSP to the farmer in a private transaction?
— P. Chidambaram (@PChidambaram_IN) September 21, 2020