டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.64 லட்சம் கோடி..!

2023 டிசம்பரில், மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி கிடைத்துள்ளது என்று இந்த தகவலை நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்படி, 2022 டிசம்பர் மாதத்தை விட 10.3% கூடுதலாக ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது. நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது, ​​டிசம்பரில் ஜிஎஸ்டி வசூலில் 2 சதவீதம் குறைந்துள்ளது.

தொடர்ந்து 10-வது மாதமாக மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பரில் ரூ.9,888 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. அதேசமயம் 2022 டிசம்பரில் தமிழகத்தில் கிடைத்த ஜிஎஸ்டியை விட 2023-ல் 19% அதிகம்.

டிசம்பர் 2023 இல், சிஜிஎஸ்டி வசூல் ரூ.30443 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி வசூல் ரூ.37935 கோடியாகவும் இருந்தது. 2023 டிசம்பரில் ஐஜிஎஸ்டி வசூல் ரூ.84255 கோடியாகவும், செஸ் ரூ.12249 கோடியாகவும் இருந்தது என்று அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்