ஜிஎஸ்டி வரி இதுவரை இல்லாத அளவு உயர்வு…ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி வசூல்.!

GST Collecthigh

நாட்டின் வலுவான வளர்ச்சியால் கடந்த ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல், அதிகபட்சமாக ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி(GST) வசூல் ஏப்ரல் மாதத்தில் 11.6% அதிகரித்து ரூ.1,87,035 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஜூலை 2017 முதல் தொடங்கப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த அளவைப் பதிவு செய்துள்ளன என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தைய அதிகபட்சமான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,67,540 கோடி, ஒரு வருடத்திற்கு முன்பு வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, இது குறித்து கூறும்போது குறைந்த வரி விகிதங்கள் இருந்தபோதிலும் வரி வசூல் அதிகரித்து வருவது, ஜிஎஸ்டி எவ்வாறு ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தை அதிகரித்துள்ளது என்பதன் வெற்றியைக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, உள்நாட்டு விற்பனையில் இருந்து வசூல் 16% வளர்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் 8.8% உயர்வு அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரலில், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, சிக்கிம் 61% அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து மிசோரம் (53%), ஜம்மு&காஷ்மீர் (44%), லடாக் (43%) மற்றும் கோவா & மணிப்பூர் (தலா 32%). ம.பி. (28%), கர்நாடகா (23%), மகாராஷ்டிரா & உ.பி (தலா 21%) மற்றும் தமிழ்நாடு (19%) ஆகியவை தேசிய சராசரியை விட வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன, ஒடிசா (3%), குஜராத் (4%), ராஜஸ்தான் (5%), ஆந்திரப் பிரதேசம் (6%) மற்றும் டெல்லி (8%) ஆகியவை பின்தங்கியுள்ளன.

மேலும் ஏப்ரல் 20இல் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதன் மூலம் ஒரே நாளில் ரூ.68,228 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டு இதே நாளில் 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.57,846 கோடியாக இருந்த, முந்தைய சாதனையை முறியடித்ததாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்