வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜிஎஸ்டி…! ஜனவரி மாதத்தில் ரூ.1.20 கோடி வசூல்…!

Default Image

ஜிஎஸ்டி வருவாய் 2019-20 நிதியாண்டின் 12 மாதங்களில் ஒன்பதில் ரூ .1 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021 ஜனவரி மாதத்தில் 31.01.2021 அன்று 6PM வரை வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ .1,19,847 கோடி ஆகும்.

ஏப்ரல் மாதத்தில் வருவாய் ரூ .32,172 கோடியாகவும், மே மாதத்தில் ரூ .62,151 கோடியாகவும், ஜூன் மாதத்தில் ரூ .90,917 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ .87,422 கோடியாகவும், ஆகஸ்டில் ரூ .86,449 கோடியாகவும், செப்டம்பரில் வசூல் ரூ.95,480 கோடியாகவும், அக்டோபரில் ரூ.1,05,155 கோடியாகவும், நவம்பரில் ரூ.1,04,963 கோடியாகவும், டிசம்பரில் ரூ .1,15,174 கோடியாகவும் வசூல் ஆனது.

ஜிஎஸ்டி வருவாய் 2019-20 நிதியாண்டின் 12 மாதங்களில் ஒன்பதில் ரூ .1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஜிஎஸ்டி விற்பனை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதால் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்