ஜிஎஸ்டி வருவாய் ஏப்ரல் மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடியாக உயர்வு..!

Default Image

ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகபட்சமாக ரூ .1.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ .1.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இது பொருளாதாரத்தின் நிலையான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஏப்ரல் மாதத்தில்  வருவாய் மார்ச் மாதத்தில் ரூ.1.23 லட்சம் கோடியை விட 14 சதவீதம் அதிகம்.  உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி (சேவைகள் இறக்குமதி உட்பட) வருவாய் முந்தைய மாதத்தை விட 21 சதவீதம் அதிகம்.

ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஏழு மாதங்களில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டியது மட்டுமல்லாமல், நிலையான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பொருளாதார நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைவதற்கான தெளிவான அறிகுறியாகும் என நிதியமைச்சகம் கூறியுள்ளது.

ஏப்ரல் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1,41,384 மத்திய ஜிஎஸ்டி ரூ .27,837 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ .35,621 கோடி, பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ .29,599 கோடி வரி உட்பட ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ .68,481 கோடி வசூலாகியுள்ளது.செஸ் வரி ரூ.9,445 கோடி( இறக்குமதி மீது விதிக்கப்பட்ட ரூ. 981 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை இருந்தபோதிலும், இந்திய வணிகங்கள் மீண்டும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலமும், வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான தேவைகளைப் பின்பற்றுவதன் மூலமும் குறிப்பிடத்தக்க வலிமையைக் காட்டியுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்