2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல்.
ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடுகள் ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு நேற்று விடுத்திருந்தது.
மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ.86,912 கோடியில், ரூ.47,617 கோடி மதிப்பிலான இழப்பீடு ஜனவரி மாதம் வரையிலும், ரூ.21,322 கோடி பிப்ரவரி-மார்ச் வரையிலும், ரூ.17,973 கோடி ஏப்ரல்-மே வரையிலும் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு விடுவித்துள்ள இந்த தொகையில் தமிழகத்திற்கு ரூ.9602 கோடி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் 41% உயர்ந்து, ரூ.7,910 கோடியாக அதிகரித்துள்ளது. நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை மாநிலங்களுக்கு, நேற்று மத்திய அரசு பிரித்து கொடுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…