நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அனைத்து மத்திய, மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயாக 86ஆயிரத்து 449 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், கடந்தாண்டை விட இந்தாண்டு 12 சதவீதம் வசூல் குறைந்துள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வருவாயாக 98 ஆயிரத்து 202கோடி ரூபாய் வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசுக்கு 15 ஆயிரத்து 906 கோடி ரூபாய் ஜிஎஸ்டியும், மாநில அரசுக்கு 21 ஆயிரத்து 64 கோடி ரூபாய் ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாகவும், 7215 கோடி ரூபாய் கூடுதல் வரியாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…