பொருளாதாரத்தின் மீது நடந்த 2வது பெரிய தாக்குதல் GST – ராகுல் காந்தி

Default Image

பொருளாதாரத்தின் மீது நடந்த 2வது பெரிய தாக்குதல் GST  என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுகலான ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம்   வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவாக, நாட்டின் ஜி.டி.பி. 23.9 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவித்தது.இது குறித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  அமைப்புசாரா பொருளாதாரத்தின் மீது நடந்த 2வது பெரிய தாக்குதல் GST. GST, UPA அரசின் திட்டம் தான். ஒற்றை வரி,குறைந்த வரி,நியாயமான எளிய வரி. பாஜகவின் GST முற்றிலும் வித்தியாசமானது.4 விதமான வரி விதிப்பு,28% வரை வரி, கடினமான புரிந்து கொள்ள முடியாத வரி என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்