முன்னர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம்.! தற்போது தமிழக GST அதிகாரி சஸ்பெண்ட்.!
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்று அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஓய்வு பெற இருந்த ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் சில மாதங்களுக்கு முன்னர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு உறுதிப்படுத்தாத காரணங்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன.
சண்டிகர் மேயர் தேர்தல் – ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வழக்கு!
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு எதிராக, நில விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மனில் விவசாயிகளின் பெயருடன் அவர்களின் சாதி பெயரும் இடம் பெற்று இருந்தது. இது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, அமலாக்கதுறையின் தலைவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் எனவும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் குடியரசு தலைவருக்கு ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இதற்கு முன்னர் மணிப்பூரில் நடைபெற்ற பழங்குடியின மக்களின் நிலைமை பார்க்கும்போது தான் இந்தியன் என செல்வதற்கு வெட்கமாக இருக்கிறது என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். மேலும், 2020 ஆம் ஆண்டு ஹிந்தி மொழிக்கு எதிராக, தனக்கு ஹிந்தி தெரியாது. ஆதலால் ஹிந்தியில் அலுவல் பணிகளை செய்ய மாட்டேன் என நிதிய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியவர் தமிழகத்தை சேர்ந்த பாலமுருகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அரசு பதவி இருந்து கொண்டே அரசு மீதான தனது விமர்சனத்தையும் முன்வைத்து வந்துள்ளார் பாலமுருகன்.