ஜூலை 11ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
ஜூலை 11-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
சிமெண்ட், ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது உள்ளிட்டவை பற்றி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பன்னோக்கு பயன்பாட்டுக்கு வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மறு ஆய்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.