செல்போன் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த முடிவு
செல்போன் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்கிறது.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 39-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.இதன் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில், செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 18%ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.செல்போன்களின் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 12 சதவீதத்தில் இருந்து 18% ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.