நிதி நெருக்கடியால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவித்தது மத்திய அரசு.!
பொது முடக்கத்தால் நிதி நெருக்கடியால் தவிக்கும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசுக்கு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் அனைத்து மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பீடு ஈடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் பொது முடக்கம் காரணமாக நிதி நெருக்கடியை சந்தித்து வரும் மாநில அரசுகளுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் 2020ல் பிப்ரவரி மாதம் வரையில் வழங்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையான ரூ.36,400 கோடியை மத்திய அரசு விடுவித்து உத்தரவிட்டுள்ளது .