அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 16% அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6% ஜிஎஸ்டி வசூல் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தகவல்.
கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 16.6% அதிகரித்து, ரூ.1.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சகம் தகவல் கூறியுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகமானத்தில் இருந்து அக்டோபர் மாத வரி வசூல், இரண்டாவது மிக அதிகபட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இதற்கு முன் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.52 லட்சம் கோடியை விட கூடுதலாக இருந்தது.
தமிழகத்தில் கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் 25% அதிகரித்து ரூ.9,540 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.