ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல்..! கடந்த ஆண்டை விட 18 % அதிகம்..!
பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல் செய்யப்பட்டது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் கோடிக்கு மேல் இருந்தாலும் பிப்ரவரி மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்திலிருந்து 5.6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயை விட 18% அதிகமாகவும், 2020 -ஆம் பிப்ரவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாயை விட 26% அதிகமாகவும் உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, மத்திய ஜிஎஸ்டியின் மொத்தத் தொகை ரூ.24,435 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,779 கோடி, ஜிஎஸ்டி ஆக ரூ.67,471 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ. 33,837 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.10,340 கோடியும் ( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 638 கோடியும் உட்பட) வசூலாகி உள்ளது.
செஸ் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூல் இந்த ஆண்டு பிப்ரவரியில் செஸ் மூலம் 10,340 கோடிகளை (பொருட்களின் இறக்குமதி மூலம் ரூ. 638 கோடி வசூல் உட்பட) அரசு வசூலித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாக ரூ.10,000 கோடிக்கு மேல் செஸ் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
✅ Rs 1,33,026 crore Gross GST Revenue collected for February 2022
✅ GST collection crossed Rs 1.30 lakh crore mark for the 5th time
Read more ➡️ https://t.co/DWFUHpgB7J pic.twitter.com/bufbpgoCMv
— Ministry of Finance (@FinMinIndia) March 1, 2022