மே மாத ஜிஎஸ்டி ரூ.1.02 லட்சம் கோடி வசூல்- மத்திய நிதியமைச்சகம் ..!
- மே மாதத்தில் ஜிஎஸ்டி ரூ. 1,02,709 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- கடந்த ஆண்டு மே மாத ஜிஎஸ்டியை விட இந்த ஆண்டு 65% கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு 65 % கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் கடந்த 8 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,02,709 மத்திய ஜிஎஸ்டி ரூ.17,592 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.22,653 கோடி, பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.26,002 கோடி வரி உட்பட இன்டர் ஜிஎஸ்டியாக ரூ.53,199 கோடி வசூலாகியுள்ளது. செஸ் வரி ரூ.9,265 கோடி( இறக்குமதி மீது விதிக்கப்பட்ட ரூ. 868 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.
✅Gross GST revenue collected in the month of May 2021 is ₹ 1,02,709 crore
Read more ➡️https://t.co/KBdu4QbwoE@nsitharamanoffc@Anurag_Office @PIB_India @DDNewslive @airnewsalerts @cbic_india
— Ministry of Finance (@FinMinIndia) June 5, 2021