ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,16,393 கோடி- மத்திய நிதி அமைச்சகம்..!
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,16,393 கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,16,393 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக ரூ.22,197 கோடியும், மாநில ஜிஎஸ்டி ஆக ரூ.28,541 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக ரூ. 57,864 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ. 27,900 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.7,790 கோடியும் ( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 815 கோடியும் உட்பட) வசூலாகி உள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி கடந்த ஆண்டின் ஜூலை ஜிஎஸ்டி விட 33% அதிகமாகும். தொடர்ந்து 8 மாதம் ஜிஎஸ்டி ரூ.1 லட்சம் கோடியை வசூலாகி வந்த நிலையில், ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் அதாவது ரூ.92,849 கோடி வசூலானது.