மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை கண்டிப்பாக வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளான இன்று நடைபெற்று வருகிறது. அப்பொழுது மாநிலங்களவையில் மத்திய அரசு,நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதுமான நிதியில்லை என்று தெரிவித்தது.
ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருப்பதால், தற்போது இழப்பீடு தொகையை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இதனிடையே இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோருக்கான சலுகைகள் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். வரி சலுகை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள் .இதற்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தர மாட்டோம் என்று நாங்கள் கூறவே இல்லை. ஜிஎஸ்டி நிலுவைத்தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.