INSAT-3DS : 16-வது முறையாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்..!
இஸ்ரோ இன்று மாலை 5.35 மணிக்கு வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை துல்லியமாக வழங்கும் இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) என்ற செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி – எஃப்14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எஃப் 14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவான செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் வகையில் இன்சாட் 3DS வடிவமைக்கப்பட்டுள்ளது.
INSAT-3DS : ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது!
இன்சாட் 3DS செயற்கைக்கோள் மூலம் வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல் முன்கூட்டியே பெற முடியும். வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி எஃப் 14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது.