விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 ராக்கெட்..! இலக்கை எட்டவில்லை என இஸ்ரோ தகவல்…!

Default Image

விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 ராக்கெட் இலக்கை எட்டவில்லை என இஸ்ரோ தகவல்.

இன்று காலை 5:43 மணியளவில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த  ஈ.ஓ.எஸ்.03  செயற்கை கோளானது, இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கணிதவியல் மற்றும் பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இந்த செயற்கைக்கோளானது 2,268 எடை கொண்டது.

ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், கிரையோஜெனிக் எஞ்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்