விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.எஃப்-12 ராக்கெட்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.எஃப்-12 (GSLV F-12) ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளமான சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து இன்று காலை 10.42 மணிக்கு “ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12” என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஆனது என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. இதனை புவிநிலைச் சுற்றிப் பாதையில் 36,000 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
#WATCH | Indian Space Research Organisation (ISRO), launches its advanced navigation satellite GSLV-F12 and NVS-01 from Sriharikota.
(Video: ISRO) pic.twitter.com/2ylZ8giW8U
— ANI (@ANI) May 29, 2023