GSAT-6A செயற்கைக்கோளின் புவிக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தகவல் தொடர்பு துண்டிப்பு…!

Published by
Venu

இஸ்ரோ  வியாழனன்று விண்ணில் செலுத்தப்பட்ட GSAT-6A செயற்கைக்கோளின் புவிக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து கடந்த வியாழனன்று ஜிஎஸ்எல்வி எப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ என்கிற தகவல் தொடர்பு செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சுற்றுவட்டப் பாதையில் அந்தச் செயற்கைக் கோளை நிலைநிறுத்தும் பணியில் பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பினர் ஈடுபட்டிருந்தனர். இரண்டாவது சுற்றுவட்டப்பாதைக்கு அதை உயர்த்தும் செயல்பாட்டுக்கு 4நிமிட நேரத்துக்குப் பின் அந்தச் செயற்கைக் கோளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. GSAT-6A  செயற்கைக்கோளில் மின்னாற்றல் அமைப்பின் கோளாறால்தான் புவிக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தகவல் தொடர்பை அது இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதிக ஆற்றல் உள்ள இந்தத் தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் 10ஆண்டுகள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் செல்பேசித் தகவல் தொடர்புக்கும் பாதுகாப்புத் துறையினரின் தகவல் தொடர்புக்கும் இந்தச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே பிஎஸ்எல்வி சி 39ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் 1எச் செயற்கைக்கோள் வெப்பத் தடுப்பு அமைப்பின் கோளாறால் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…

19 seconds ago

“அஜித் உடம்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்லை” – ரேஸிங் அணி வீரர் ஃபேபியன்.!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…

14 minutes ago

பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!

சென்னை : கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…

56 minutes ago

பொங்கல் தொகுப்பு – நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…

60 minutes ago

“இந்திய வீரர்கள் இங்கு வந்து விளையாடுங்க” அழைப்பு கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…நேபாள் நிலநடுக்கம் வரை!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…

2 hours ago