GSAT-6A செயற்கைக்கோளின் புவிக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தகவல் தொடர்பு துண்டிப்பு…!
இஸ்ரோ வியாழனன்று விண்ணில் செலுத்தப்பட்ட GSAT-6A செயற்கைக்கோளின் புவிக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து கடந்த வியாழனன்று ஜிஎஸ்எல்வி எப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ என்கிற தகவல் தொடர்பு செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சுற்றுவட்டப் பாதையில் அந்தச் செயற்கைக் கோளை நிலைநிறுத்தும் பணியில் பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பினர் ஈடுபட்டிருந்தனர். இரண்டாவது சுற்றுவட்டப்பாதைக்கு அதை உயர்த்தும் செயல்பாட்டுக்கு 4நிமிட நேரத்துக்குப் பின் அந்தச் செயற்கைக் கோளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. GSAT-6A செயற்கைக்கோளில் மின்னாற்றல் அமைப்பின் கோளாறால்தான் புவிக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தகவல் தொடர்பை அது இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதிக ஆற்றல் உள்ள இந்தத் தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் 10ஆண்டுகள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் செல்பேசித் தகவல் தொடர்புக்கும் பாதுகாப்புத் துறையினரின் தகவல் தொடர்புக்கும் இந்தச் செயற்கைக் கோளைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே பிஎஸ்எல்வி சி 39ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் 1எச் செயற்கைக்கோள் வெப்பத் தடுப்பு அமைப்பின் கோளாறால் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.