“கணபதி பாப்பா மோர்யா! கணேஷ் சதுர்த்திக்கு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”- பிரதமர் மோடி!
விநாயகர் சதுர்த்திக்கு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால், அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர், “கணபதி பாப்பா மோரியா! கணேஷ் சதுர்த்திக்கு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என ஹிந்தியில் பதிவிட்டார்.
आप सभी को गणेश चतुर्थी की बहुत-बहुत बधाई। गणपति बाप्पा मोरया!
Greetings on the auspicious festival of Ganesh Chaturthi. May the blessings of Bhagwan Shri Ganesh always be upon us. May there be joy and prosperity all over.
— Narendra Modi (@narendramodi) August 22, 2020
மேலும், “கணேஷ் சதுர்த்தியின் புனித பண்டிகைக்கு வாழ்த்துக்கள். பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருக்கட்டும். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.