முதலில் அவர்களுக்கு வணக்கம் செலுத்துங்கள் – ராம்நாத் கோவிந்த்
வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான பாதை தொடக்கத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும். பரந்த மக்கள்தொகை கொண்ட நாட்டை உணவு தானியங்கள், பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்துள்ளனர்.
இயற்கை இடர்பாடுகள், கொரோனா தொற்று என பல சவால்களை எதிர்கொண்டு உற்பத்தியை தக்கவைத்தனர். வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான பாதை தொடக்கத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும். விவசாயிகளின் நலன் காப்பதில் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது.
20 வீரர்கள் தங்கள் உயிரை தந்து எல்லையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தோல்வியடைய செய்தனர். துணிச்சலான வீரர்களுக்கு நாடு நன்றியுடன் இருக்கும். எந்த விலை தந்தாவது நமது தேசிய நலன் பாதுகாக்கப்படும். சுயசார்பு இந்தியா திட்டத்தில் நாடு வளர்ச்சி பாதையில் விரைவாக முன்னேறும். உலகத்திற்கே கொரோனா தடுப்பூசியை இந்தியா தயாரித்து அளிக்கும் என தெரிவித்துள்ளார்.