சொத்துக்காக பாட்டியைக் கொன்ற பேரன்!
புனேயில் சொத்துக்காக பாட்டியைக் கொன்று உடல் உறுப்புகளை ஆற்றில் வீசிய பேரன்.
புனேயில் சொத்து தகராறு காரணமாக குட்டு கெய்க்வாட் (20) என்பவர் தனது 62 வயது பாட்டியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக போலீஸார் நேற்று(செப் 6) தெரிவித்தனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட குட்டு கெய்க்வாட், தனது தந்தையுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
போலீஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் வீடு மற்றும் சில தங்க ஆபரணங்களை தனது பேரனுக்கு கொடுக்க மறுத்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறினார்.