பேரனை கை ,கால்கள் கட்டி ஆற்றில் தள்ளி கொலை செய்த பாட்டி..!

பெங்களூரை சேர்ந்த 60 வயதான சாந்தாம்மா என்பவர் தனது பேரனை கொலை செய்து விட்டதாக கூறி நேற்று முன்தினம் காலை 8 போலீசாரிடம் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் ஹேமாவதி ஆற்றுக்கு மீட்பு படை வீரர்களை அனுப்பி வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார். மதியம் 2 மணிக்கு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது .
சாந்தாம்மாவிடம் நடத்திய விசாரணையில் , தன் மகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பேரனை கொண்டதாக கூறினார்.சாந்தாம்மாவின் மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை பிரிந்து விட்டு தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மங்களூருவில் உள்ளார்.
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைதான் சிறுவன் பிரஜ்வால். சாந்தாம்மா வீட்டில் சிறுவனை விட்டுவிட்டு சாந்தாம்மா மகள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கடந்த நான்கு மாதங்களாக பேரனை கவனித்துக்கொண்டிருந்த சாந்தாம்மா மகளின் இரண்டாவது அவரிடம் திருமணம் குறித்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
பலமுறை தனது மகளை வீட்டிற்கு வரச் சொல்லி கூறியுள்ளார். அவர் வரவில்லை என சொல்ல நீ வரவில்லை என்றால் உனது மகளை கொன்று விடுவேன் என கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து வந்த தனது பேரனை கை , கால்களை கட்டி ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.
அதன் பிறகு சாந்தாம்மாவும் தற்கொலை செய்துள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். என்பது விசாரணையில் தெரியவந்தது.