வருகிறது ரயிலுக்கான ஜிபிஎஸ் சிஸ்டம், இஸ்ரோவுடன் இணைந்து இந்திய ரயில்வே முயற்சி
இந்திய ரயில்வே இஸ்ரோவுடன் இணைந்து நிகழ்நேர ரயில் கண்காணிப்பு (RTIS) அமைப்பை உருவாக்குகிறது.
இந்திய ரயில்வே ஆனது, ரியல்-டைம் ட்ரெயின் இன்பர்மேஷன் சிஸ்டம்(RTIS) எனும் அமைப்பை இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கிக்கொண்டிருக்கிறது.முதலில் 2700 ரயில் இன்ஜின்களுக்கு RTIS சாதனங்கள், 21 மின்சார ரயில்கள் பராமரிப்பு நிலையத்தில்(லோகோ ஷெட்) பொருத்தப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) இணைந்து உருவாக்கிய இந்த RTIS சாதனங்கள், ரயில்களின் இயக்க நேரத்தை வழங்குகிறது. கன்ட்ரோல் ஆபீஸ் அப்ளிகேஷன் (COA) மூலம் இந்த தகவல்களை பெற முடியும்.
RTIS ஆனது 30 வினாடிகள் இடைவெளியில் ரயில்களின் இருப்பிட நிலவரங்களை வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், RTIS சாதனங்கள் பொருத்தப்பட்ட ரயில்களின் வேகம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.