ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்பு அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது..
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த ஆகஸ்ட் 3 ம் தேதி ராஜ்யசபாவில் பேசுகையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை குறைக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வசூல் அமைப்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
அடுத்த ஆறு மாதங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இறுதி முடிவுகள் இன்னும் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் “சிறந்த தொழில்நுட்பம்” விரைவில் தேர்ந்தெடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பயனர்கள் வாகனம் ஓட்டும் துல்லியமான நேரத்திற்கு கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக அந்தத் தொகை அவர்களின் கணக்கில் இருந்து கழிக்கப்படும். மேலும், பிளாசாக்களில் டோல் செலுத்தாத எவரையும் தண்டிக்க இப்போது சட்டம் இல்லை என்பதால், சுங்கச்சாவடிகளில் இருந்து தப்பிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் என்று கட்கரி கூறினார்.
லக்சுரி ரைடின் நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான சுமித் கார்க் கூறுகையில், கணிசமான பகுதி மக்கள் இன்னும் தங்கள் வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லாததால், நீண்ட வரிசைகள் உள்ளிட்ட பிற காரணிகள் சிரமமாக இருப்பதால் ஒட்டுமொத்த வரி வசூல் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் பயணிகள் ரொக்கமாக கட்டணம் செலுத்துவதால், பயண நேரம் தடைபடுகிறது. ஜிபிஎஸ் நிறுவப்பட்டு செயற்கைக்கோள் அமைப்புடன் ஒத்திசைக்கப்பட்டால், கட்டண வசூல் மேம்படும்” என்றார்.
ஏற்கனவே நிறுவப்பட்ட ஜிபிஎஸ் அமைப்புகள் இல்லாத வாகனங்களுக்கு என்ன நடக்கும் என்பதுதான் நான் எதிர்பார்க்கும் ஒரே பிரச்சனை. இது கட்டாயமானால், பழைய கார் உரிமையாளர் ஜிபிஎஸ் பொருத்த வேண்டும் என்று அவர் சில சிக்கல்களை முன்னிலைப்படுத்தி கூறினார்.