பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில்,பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பின்னரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசு மீது குறை கூறுவது வேதனையளிக்கிறது.
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மட்டும் ரூ.21 லட்சம் கோடியை வசூலித்துள்ளது மத்திய அரசு. பெட்ரோல் மீதான கலால் வரி 258 %, டீசல் மீதான கலால் வரி 820 % ஆகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தும் மத்திய அரசு விலையை குறைக்காதது கொடுமையானது.1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.33 வரியும்,1 லிட்டர் டீசலுக்கு ரூ.32 வரி வசூலிக்கப்படுகிறது.எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…