காஷ்மீரில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது- ஆளுநர் சத்யபால் மாலிக்
காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இந்த நடைமுறை அக்டோபர் -31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இணையதள சேவை ,செல்போன் சேவை,லேண்ட் லைன் சேவைகள் முடக்கப்பட்டது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரில் நிலைமை மாறி வருகிறது.இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் .ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளிலும் வரும் நாட்களில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கும் .ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.குப்வாரா, ஹண்ட்வாரா மாவட்டங்களில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தகவல்தொடர்பு கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்படும் என்று தெரிவித்தார்.