ஜிஎஸ்டி இழப்பீடு தொகை : மாநிலங்களுக்கு 17-வது தவணையாக ரூ.5,000 கோடி விடுவிப்பு

Published by
Venu

ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 17-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சகம் வழங்கியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 17-வது தவணையாக ரூ. 5,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 4,730.41 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூ. 269.59 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (டெல்லி , ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம்,  மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிமுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் இழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டு  நிதியில் 91 சதவீதம், மாநிலங்களுக்கும் , சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ரூ. 91,460.34 கோடி மாநிலங்களுக்கும், ரூ. 8,539.66 கோடி  சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும்  வழங்கப்பட்டுள்ளது.இந்த வாரத்திற்கான நிதி 5.5924 சதவீதம் என்னும் வட்டி விகிதத்தில் கடனாக வாங்கப்பட்டுள்ளது. இது வரை, ரூ. 1,00,000 கோடி, 4.8307 சதவீதம் என்னும் சராசரி வட்டி விகிதத்தில் மத்திய அரசால் கடனாக வாங்கப்பட்டுள்ளது.மத்திய அரசு தெரிவித்த விருப்பத் திட்டங்களில் முதலாம் விருப்பத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் விரும்பின. இதைத் தொடர்ந்து, மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு ரூ. 1,06,830 கோடியைக் கூடுதல் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகம், மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீத அளவுக்கு ரூ.9627 கோடியும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.6002.53 கோடியும், புதுச்சேரி சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வெளிச்சந்தையில் ரூ.713.61 கோடியும் கூடுதலாக கடன் திரட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

3 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

3 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

4 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

5 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

5 hours ago