சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம், 23-ம் தேதியுடன் முடிவடைந்ததால், 24-ம் தேதிக்குப் பின் காப்பீடு திட்டம் புதுப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனாக்கு எதிரான போரில் சுகாதார பணியாளர்கள் நம்மை காக்கின்றனர். இதனால் அவர்களை கொரோனா வாரியர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். கொரோனாவுடன் தினமும் போராடும் இவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பலர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் நிலையில், சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில், கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. பிரதான் மந்திரி கரிப் கல்யான் தொகுப்பு எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இந்த திட்டம், கடந்தாண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், 3 முறை நீட்டிக்கப்பட்டது. இந்த காப்பீடு திட்டத்தின் மூன்றாம் முறை கால அளவு வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், 24-ம் தேதிக்குப் பின் புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…