#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோவாக்சின், கோவிஷில்டு என இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அவசரகால தேவைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. ரஷ்யாவின் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.