கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்.!
ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்.
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக நேற்று தகவல் கூறப்பட்டது. கொரோனா அவசர கால பயன்பாட்டிற்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை செய்ததாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் மருந்துக்கு மத்திய அரசு நேற்றே ஒப்புதல் அளித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆகவே, கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தபின், டெல்லி மட்டும் அல்ல, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தெரிவித்திருந்தார்.